கனடாவில் காற்றின் தரம் குறித்து எச்சரிக்கை
கனடாவில் காற்றின் தரம் தொடர்பில் விசேட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் காட்டுத்தீ புகை காரணமாக வெளிவந்த சிறப்பு காற்றுத் தர அறிவிப்புகள் கனடாவின் பல பகுதிகளில் தொடர்ந்தும் அமலிலிருக்கின்றன.
மேலும், சில இடங்களில் கடும் வெப்பமும் ஈரப்பதமும் மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய கனடா, மானிடோபா மற்றும் சாஸ்காஸ்சுவான் உள்ளிட்ட பல பகுதிகள், ப்ரேரி மற்றும் வட ஒன்டாரியோவில் ஏற்பட்ட காட்டுத்தீ புகையின் தாக்கம் காரணமாக, கனடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளது.
மக்கள் வெளியே செல்கின்ற நேரத்தை வரையறுக்குமாறும் புகை தொடர்பான உடல் பாதிப்பு அறிகுறிகளை கவனிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டொரொண்டோ உள்ளிட்ட சில பகுதிகளில், காற்று தர எச்சரிக்கை சிறப்பு அறிவிப்பாக மாற்றப்பட்டது, ஏனெனில் நிலைமை சற்று மேம்பட்டுள்ளது.
ஆனால், வெப்ப எச்சரிக்கை இன்னும் அமலிலுள்ளதால், புதன்கிழமை வரை 31°C முதல் 35°C வரை அதிகபட்ச வெப்பநிலைகள் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.