லண்டனில் ஏலம் விடப்பட்ட முகலாயர் காலத்து கண்ணாடிகள்... இவ்வளவு மதிப்பா?
லண்டனில் இடம்பெற்ற ஏலத்தில் பலகோடிக்கு ஏலம் போன முகலாயர் கால கண்ணாடிகள்.
லண்டனின் புகழ்பெற்ற ஏல நிறுவனமான சோதேபியின் மூலம் சுமார் இரண்டு ஜோடி முகலாயர் கால கண்ணாடிகள் ஏலம் விடப்பட்டன. இதன் ரூபா மதிப்பானது சுமார் 27 கோடிக்கும் அதிகமாக விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பிரேம்கள் வைரத்தாலும் லென்ஸ்கள் மரகதத்தாலும் உருவானவை. இதற்கு ஹலோ ஆப் லைட் என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த லென்ஸ்கள் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும். இதனை தொடர்ந்து கண்ணாடியில் உள்ள பிரேம்கள் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கூறப்படுகிறது.
குறிப்பாக 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இளவரசருக்காக இதனை உருவாக்கியுள்ளனர்.
மேலும் அதில் உள்ள வைரங்கள் கோல்கொண்டா சுரங்கங்களில் இருந்து கொண்டுவரப்பட்டவை என கூறப்படுகிறது.