கனடாவில் பிரபல உணவு மற்றும் பானப் பொருட்கள் திரும்பப் பெறல்!
உணவுப் பாதுகாப்புக் காரணங்களுக்காக, பூச்சிகள் மற்றும் உலோகத் துகள்கள் கலந்திருப்பது போன்ற குறைபாடுகளால் கனடாவில் சில உணவு மற்றும் பானப் பொருட்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கனேடிய உணவுப் பரிசோதனை முகவர் நிலையம் தனது இணையத்தளத்தில் எச்சரிக்கை மற்றும் திரும்பப் பெறும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பொருட்களின் விபரங்கள் வருமாறு: 'ட்ரீ ஆஃப் லைஃப் கனடா' நிறுவனம் தனது 'புரொடியூசர்ஸ்' பிராண்ட் பழுப்பு அரிசியில் பூச்சிகள் இருப்பதன் காரணமாக அதனைத் திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

22.6 கிலோகிராம் எடையுள்ள அரிசிப் பொதிகள் அல்பர்ட்டா, பிரிட்டிஷ் கொலம்பியா, நியூ பிரன்சுவிக், நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடோர், நோவா ஸ்கோஷியா, ஒன்ராறியோ மற்றும் கியூபெக் ஆகிய மாகாணங்களில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இவை விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கோல்ட் கிரைண்ட்' பிராண்ட் இயற்கை மஞ்சள் தூளில் அனுமதிக்கப்படாத 'சூடான் I' எனும் நிறமி கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இத்தயாரிப்பைப் பயன்படுத்தியதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கருதுபவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரை எவருக்கும் உடல்நலப் பாதிப்புகள் பதிவாகவில்லை எனவும், இது குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
கியூபெக்கைத் தளமாகக் கொண்ட ஆர்ச்சிபால்ட் நிறுவனம், தனது 'Nuit Blanche White IPA' பியரில் உலோகத் துகள்கள் (Metal pieces) கலந்திருப்பதன் காரணமாக அதனைத் திரும்பப் பெற்றுள்ளது.
மேற்கண்ட பாதிக்கப்பட்ட பொருட்களை எவரும் பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ, பரிமாறவோ அல்லது விநியோகிக்கவோ வேண்டாம் என கடுமையாக எச்சரித்துள்ளது.
இதேவேளை, உலோகத் துகள்கள் கலந்திருந்த காரணத்தால் அண்மையில் Molson Canadian, Coors Light, Blue Moon ஆகிய பிரபல பியர் வகைகளும் திரும்பப் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.