தங்க நாக்குடன் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகள்; அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்!

Egypt
By Sundaresan Dec 13, 2022 09:38 AM GMT
Sundaresan

Sundaresan

Report

எகிப்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் (Archaeologists Researchers) பல பழங்கால மம்மிகளைக் கண்டறிந்துள்ளனர்.

அவற்றின் வாயில் திடமான சிப் போன்ற தங்க நாக்குகள் (Golden tongue) இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மம்மி (Mummies) சடலங்களின் பல மம்மிகளில் தங்க நாக்கு இருப்பது ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதன் பின்னணியில் இருக்கும் பாரம்பரிய உண்மையை (Ancient truth about golden tongue mummies) இப்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கெய்ரோவிற்கு (Cairo) வடக்கே சுமார் 40 மைல் தொலைவில் உள்ள மத்திய நைல் டெல்டாவில் உள்ள குவெயிஸ்னா நெக்ரோபோலிஸ் (Quweisna necropolis) பகுதியில், கிமு 300 மற்றும் 640 ஆம் ஆண்டுகளில் பாதுகாக்கப்பட்ட மம்மி சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மம்மிகளில் (preserved mummy corpses) உள்ள பெரும்பாலான பதப்படுத்தப்பட்ட சடலங்களின் வாய்களில் தங்க நாக்கு இருக்கும் விசித்திரமான உண்மையை ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டறிந்துள்ளனர்.

தங்க நாக்குடன் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகள்; அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்! | Mummies Found With Golden Tongues

அந்த இடத்தில் உள்ள கல்லறைகளை ஆய்வு செய்த நிபுணர்கள், மம்மிகளின் வாயில் மனித நாக்கு போன்ற வடிவிலான தங்கச் சிப்களுடன் (golden tongue mummies) பல மம்மிகளைக் கண்டறிந்ததாகக் கூறியுள்ளார்.

தொல்பொருள் ஆய்வுக்கான உச்ச கவுன்சிலின் பொதுச் செயலாளர் டாக்டர் முஸ்தபா வஜிரி, நியூயார்க் போஸ்ட் (New York Post) மேற்கோள் காட்டிய செய்திக்குறிப்பில் இந்த சம்பவம் பற்றிய தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

எம்பாமிங் செயல்பாட்டின் (embalming process) போது, ​​இறந்தவரின் உண்மையான நாக்குகள் அகற்றப்பட்டு, அந்த உறுப்பைப் பிரதிபலிக்கும் ஒரு தங்கத் துண்டாக இந்த தங்க நாக்குகள் மாற்றப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. எகிப்திய புராணங்களில் இருப்பது போல, மனிதனின் நாக்கு இறந்த பின் அழுகிவிடும் என்பதனால், இறந்த பிறகு செல்லும் உலகில் பேச இந்த தங்க நாக்குகள் தேவைப்படும் என்பதற்காக வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தங்க நாக்குடன் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகள்; அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்! | Mummies Found With Golden Tongues

குறிப்பாக, இறந்தவர்கள் பண்டைய எகிப்திய "பாதாள உலகத்தின் பிரபு (Lord of the Underworld)" ஒசைரிஸுடன் இறந்த பிறகும் தொடர்பு கொள்ள உதவும் நோக்கத்திற்காக இத்தகைய தங்க நாக்குகளை மக்கள் பயன்படுத்தியுள்ளனர் என்ற உண்மையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பண்டைய காலத்து எகிப்த்திய கலாச்சாரத்தில் இறந்ததற்குப் பின்னால் இருக்கும் வாழ்க்கையைத் (After death life) தொடர இதுபோன்ற சில விசித்திரமான சடங்குகளை மக்கள் பின்பற்றியுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வஜிரியின் கூற்றுப்படி, மம்மிஃபிகேஷன் செயல்பாட்டின் போது பயன்படுத்தப்படும் கைத்தறி உறைகளுக்கு அடியில் காணப்பட்ட சில எலும்பில் கூட தங்கத்துடன் பல மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. நியூயார்க் போஸ்ட் தகவலின் படி, இந்த மம்மிகள் அனைத்தும் மிகவும் மோசமான நிலையில் இருந்தன என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல், இன்னும் சில சுவாரசியமான கண்டுபிடிப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால கல்லறையில், ஸ்காராப் வண்டுகள் மற்றும் தாமரை மலர்களாக வடிவமைக்கப்பட்ட தங்க சிப்களும் கண்டுபிடிக்கப்பட்டன - அதே போல் இறுதிச் சடங்குகள், மண் பாத்திரங்கள், பசைகள் மற்றும் எம்பாமிங் செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் தார், மனித வடிவ மர சவப்பெட்டிகளின் எச்சங்கள் மற்றும் பல செப்பு நகங்கள் போன்றவை இத்துடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தங்க நாக்குடன் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகள்; அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்! | Mummies Found With Golden Tongues

முதல் தங்க நாக்குடன் கூடிய மம்மி குவைஸ்னா நெக்ரோபோலிஸ் 1989 இல் கண்டுபிடிக்கப்பட்டது, இது அடுத்த மூன்று தசாப்தங்களில் பல சுற்று அகழ்வாராய்ச்சிகளைத் தூண்டியது என்று தி போஸ்ட் தெரிவித்துள்ளது. தங்க நாக்கு கொண்ட மம்மிகள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறையின் விரிவாக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டன, இது மூன்று தனித்தனி வரலாற்றுக் காலங்களிலிருந்து சடலங்களை வைத்திருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொல்பொருளியல் உச்ச கவுன்சிலின் எகிப்திய தொல்லியல் துறையின் தலைவர் டாக்டர் அய்மன் அஷ்மாவியின் கூற்றுப்படி, ஒவ்வொரு புதைகுழி நிலையும் வெவ்வேறு சடங்குகள் மற்றும் மம்மிகளை அடக்கம் செய்யும் முறைகளின் ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார். காரணம், நியூயார்க் போஸ்ட் அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 2,000 ஆண்டுகள் பழமையான மண்டை ஓட்டை கண்டுபிடித்தனர்.

அந்த மண்டை ஓட்டின் வாயில் நாக்கு வடிவ தங்க சில்லுகளுடன் ஒரு மம்மி கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது "ஒசைரிஸின் பெரிய கல்லறை" என்று அழைக்கப்படும் அலெக்ஸாண்ட்ரியாவிற்கு அருகிலுள்ள டபோசிரிஸ் மேக்னாவில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US