பாலியல் குற்றங்கள்; முன்னாள் கத்தோலிக்க ஆயருக்கு ஆறு ஆண்டு ஆறு மாத சிறை

Sexual harassment Australia
By Sulokshi Oct 08, 2026 10:04 AM GMT
Report

 மேற்கு ஆஸ்திரேலியாவில் முன்னாள் கத்தோலிக்க ஆயர் கிறிஸ்டோபர் சாண்டர்ஸுக்கு, சம்மதமின்றி பாலியல் ஊடுருவல் செய்த ஒரு குற்றச்சாட்டு மற்றும் சட்டவிரோதமான, அநாகரிகமான தாக்குதல் தொடர்பான 12 குற்றச்சாட்டுகளுக்காக ஆறு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தண்டனை ஆகஸ்ட் 12ஆம் திகதியிலிருந்து முன்திகதியிட்டு கணக்கிடப்பட்டுள்ளது. புரூமின் முன்னாள் ஆயரான கிறிஸ்டோபர் ஆலன் சாண்டர்ஸ், பல தசாப்தங்களாக ஆஸ்திரேலியாவின் மிக மூத்த கத்தோலிக்கர்களில் ஒருவராக விளங்கினார். சாண்டர்ஸ் ஆகஸ்ட் மாதம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தார்.

பாலியல் குற்றங்கள்; முன்னாள் கத்தோலிக்க ஆயருக்கு ஆறு ஆண்டு ஆறு மாத சிறை | Sex Crimes Former Catholic Bishop Jailed Australia

அவரால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட அறிக்கையில், நான் அவர் பயன்படுத்திய ஒரு பொம்மையாக இருந்தேன் என்றும் இப்போது என் தலை வலியால் துடிக்கிறது. நான் மிகுந்த வேதனையில் இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மற்றொருவர், என்னால் அதைப் பற்றிப் பேச முடியாது என்று கூறியதாக ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனமான ஏபிசி தெரிவித்துள்ளது.

வடமேற்கு ஆஸ்திரேலியாவின் பரந்த கடலோரப் பகுதியையும் அங்குள்ள பல தொலைதூர பழங்குடியின சமூகங்களையும் உள்ளடக்கிய ப்ரூம் மறைமாவட்டத்திற்கு சாண்டர்ஸ் 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமை தாங்கினார்.

அவர் மீது பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் ஆஸ்திரேலிய ஊடகங்களில் 2020ஆம் ஆண்டு வெளிவந்ததைத் தொடர்ந்து ஆயர் பதவியிலிருந்து விலகினார்.

இருப்பினும், ஓய்வுபெற்ற ஆயர் என்ற கௌரவப் பட்டத்தைத் தொடர்ந்து தக்க வைத்திருந்தார். ஆரம்பகட்ட காவல்துறை விசாரணையில், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்குப் போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் குற்றச்சாட்டுகள் தொடர்பான சந்தேகங்களும் வதந்திகளும் தொடர்ந்து நிலவிய நிலையில், திருச்சபையின் உள்மட்ட விசாரணை பின்னர் தொடங்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு போப் பிரான்சிஸால் அறிமுகப்படுத்தப்பட்ட Vos estis lux mundi என்ற விதிமுறைகளின் கீழ், உயர் மட்ட திருச்சபை அதிகாரிகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் வகையில் வத்திக்கான் 2022ஆம் ஆண்டு தனிப்பட்ட விசாரணையைத் தொடங்கியது.

அந்த விசாரணையில் கிடைத்த தகவல்கள் பின்னர் காவல்துறையுடன் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறை தனது விசாரணையை மீண்டும் தொடங்கியது. சாண்டர்ஸுக்கு தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் தலைவர் திமோதி காஸ்டெல்லோ, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்கு ஏற்பட்ட ஆழமான பாதிப்பை ஒப்புக்கொண்டார்.

உங்களுக்கு இழைக்கப்பட்ட வலி மற்றும் வேதனைக்காக நாங்கள் வருந்துகிறோம். திருச்சபையின் ஒரு தலைவரால் உங்கள் நம்பிக்கை இவ்வளவு நேரடியாகவும் ஆழமாகவும் காட்டிக்கொடுக்கப்பட்டதற்காக நாங்கள் வருந்துகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.   

மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US