Manchester நகரில் 14 வயது சிறுமி மீது மூன்று கொலை குற்றச்சாட்டுகள் பதிவு
பிரித்தானியா Manchester நகரில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் நடந்த கத்தித் தாக்குதலைத் தொடர்ந்து, 14 வயது சிறுமி மீது மூன்று கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, பிளாக்லி (Blackley) பகுதியில் உள்ள பிளான்ட் ஹில் (Plant Hill ) சாலையில் அமைந்துள்ள கோ-ஆப் அகாடமியில் நடந்த இந்த தாக்குதலில் 14 வயதுடைய சிறுவன் ஒருவனும் சிறுமி ஒருவரும் மற்றும் 27 வயதுடைய ஆண் ஊழியர் ஒருவரும் காயமடைந்தனர்.

தாக்குதலைத் தொடர்ந்து பாடசாலை வளாகத்தில் கூர்மையான ஆயுதத்தை வைத்திருந்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழும் சந்தேக நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரை இன்று (12) லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும் இது தொடர்பில் பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் விசாரணையை நடத்தி வருகின்றனர். இந் நிலையில் , தற்போது வரை இது ஒரு பயங்கரவாத சம்பவமாக அறிவிக்கப்படவில்லை என கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.