கொலம்பியாவில் பெண் கொலை; தப்பியோடிய பிரித்தானியர் எக்குவடோரில் கைது!
கொலம்பியா பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு, அவரது சடலம் சூட்கேஸ் ஒன்றிற்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரித்தானிய பிரஜை , எக்குவடோரில் வைத்து சர்வதேசப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பிரித்தானியா போர்ன்மவுத் (Bournemouth) பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய மேத்யூ ஆஷ்லே ஃபாஸ்டர்-ஸ்மித் (Matthew Ashley Foster-Smith) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சடலத்தைச் சூட்கேஸ் ஒன்றிற்குள் வைத்துவிட்டு தப்பியோடிய பிரித்தானியர்
கடந்த ஜூன் 18 ஆம் திகதி , கொலம்பியாவின் போகோட்டா (Bogota) நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வைத்து, 36 வயதுடைய நடாலியா வில்லால்பா (Natalia Villalba) என்ற பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான ஃபாஸ்டர்-ஸ்மித், அப்பெண்ணை அடித்துக் கொன்றுவிட்டு, கொலையை மறைப்பதற்காக அவரது சடலத்தைச் சூட்கேஸ் ஒன்றிற்குள் அடைத்து வைத்துவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார்.
இந்நிலையில், கொலம்பியாவிலிருந்து தப்பியோடி எக்குவடோர் நாட்டின் கியூட்டோ சர்வதேச விமான நிலையத்தில் மறைந்திருந்த போதே, சந்தேக நபரை சர்வதேசப் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.