வெளிநாட்டில் இலங்கை பெண்ணை கொலை செய்த ஆவி ; வெளியான அதிர்ச்சி தகவல்
இத்தாலியில் இலங்கைப் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது மகன் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
மிலான் நகரத்தில் உள்ள தனது வீட்டில் இலங்கை பெண்ணை கொலை செய்ததாக கூறும் 25 வயதுடைய மகன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
தனது உடலுக்குள் புகுந்துள்ள உறவினர் ஒருவரின் ஆவியே தனது தாயை கொலை செய்ததாக சந்தேக நபர் அருகில் உள்ளவர்களிடம் சத்தமாக கூச்சலிட்டு கூறியுள்ளார்.
இதன்படி சந்தேக நபரான மகன் இலங்கையின் நாத்தன்டிய பிரதேசத்தில் உள்ள தேவாலயத்துடன் தொடர்புட்டு செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் பின்னர் சந்தேக நபர் தனது உடலில் பேய் பீடித்துள்ளதாக கூறி வீட்டில் விளக்கை ஏற்றி வைத்து பேய்க்கு அஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்போது நாத்தாண்டிய முதுகடுவ பகுதியைச் சேர்ந்த 54 வயதான தமயந்தி ரத்நாயக்க வயது 54 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் மிலான் நகர பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.