உலகம் முழுவதும் X சமூக வலைதளம் முடக்கம்: ஆயிரக்கணக்கான பயனர்கள் பாதிப்பு
எலான் மஸ்கிற்கு சொந்தமான X (முன்னாள் Twitter) சமூக வலைதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு, படிப்படியாக சீர் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த முடக்கம் காரணமாக உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பயனர்கள் தளத்தை அணுக முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
Downdetector தரவுகளின்படி, இன்று காலை முதல் இந்த தொழில்நுட்ப கோளாறு தொடங்கியது.

அமெரிக்காவில், உச்சகட்டத்தில் 28,300-க்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டன.பின்னர் அந்த எண்ணிக்கை குறைந்து சுமார் 700 புகார்களாக இறங்கியது.
இங்கிலாந்து: 8,000-க்கும் மேற்பட்ட புகார்களிலிருந்து சுமார் 130 ஆக குறைந்தது.
கனடா: நாள் தொடக்கத்தில் 3,200-க்கும் அதிகமான புகார்கள் பதிவான நிலையில், பின்னர் படிப்படியாக குறைந்தது Downdetector என்பது பல்வேறு ஆதாரங்களில் இருந்து பயனர்கள் அளிக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து சேவை முடக்கங்களை கண்காணிக்கும் இணையதளம் ஆகும்.