எரியில் விழுந்து விபத்துக்குள்ளான போர் விமானம்! ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்
மியான்மரில் உள்ள சகாயிங் நகரின் அருகே போர் விமானம் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த விபத்து விமானத்தில் பயணித்த பைலட் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த விபத்து இடம்பெற்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டதாக மீட்புப் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான விமானம் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்றும், விமானப்படையின் விருப்பத் தேர்வான நீல நிற பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான படைகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே தீவிரமாக சண்டை நடைபெறும் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.