மாயமான இளம் காதல் ஜோடிகள் சடலமாக மீட்பு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சான் ஆண்டோனியோ நகரில் பொருட்கள் வாங்கச் சென்ற இளம் காதல் ஜோடிகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சவானா நிக்கோல் சோடோ எனும் 18 வயதுடைய பெண்ணும் இசைக்கலைஞரான 22 வயதுடைய மேத்யூ குரேரா எனும் ஆணும் காதலித்து வந்த நிலையில் தனி வீடொன்றில் வாழ்ந்து வந்துள்ளனர்.
அவ்வப்போது தனது தாயுடன் சவானா போனில் பேசி வந்துள்ளார்.
இந்தநிலையில் சவானா தனது காதலன் மேத்யூவுடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான பொருட்களை வாங்க சென்றுள்ளார். அதன்பின்பு இருவரும் வீடு திரும்பவில்லை.
இதனிடையே நிறைமாத கர்ப்பிணியான சவானாவுக்கு இம்மாத இறுதியில் ஆபரேஷன் செய்ய டாக்டர்கள் திகதி குறித்திருந்தனர்.
இந்தநிலையில் சவானா தனது காதலன் மேத்யூவுடன் கடந்த வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான பொருட்களை வாங்க சென்றநிலையில் இருவரும் வீடு திரும்பவில்லை.
பதறிய பெற்றோர்
பதறிபோன அவர்களுடைய பெற்றோர்கள் இதுகுறித்து போலிஸாரிடம் முறைப்பாடு செய்ததனைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமான சாலையில் கார் ஒன்று சந்தேகத்திற்கிடமான நிலையில் நின்று கொண்டிருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
மேலும் அந்த கார், மாயமான குரேரா பெயரில் பதிவாகி இருந்தது தெரிந்தது. சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து சென்று அந்த காரை சோதனையிட்டபோது காருக்குள் உடல் அழுகியநிலையில் இரண்டு சடலங்களை மீட்கப்பட்டுள்ளன.
விசாரணையில் பிணமாக கிடந்தவர்கள் சவானா மற்றும் அவருடைய காதலன் குரேரா என தெரியவந்துள்ளது. இதனிடையே நிறைமாத கர்ப்பிணியான சவானாவுக்கு இம்மாத இறுதியில் சத்திரசிகிச்சை செய்ய திகதி பதிவுசெய்திருந்தமைக் குறிப்பிடத்தக்கதாகும்.
உடல்களை கைப்பற்றிய போலிஸார், பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மாயமான இளம் காதல்ஜோடி இறந்தநிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.