மர்மமான முறையில் கொல்லப்பட்ட ஆபாச நடிகை; உறவினர் கூறிய அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவில் பிரபல ஆபாச நடிகை திடீரென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற நகரத்தில் வசிக்கும் 27 வயதுடைய ஆபாச நடிகை லாரன் ஸ்காட்(lauren scott). இவருக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு. இந்நிலையில் இவரின் கணவர், தான் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, லாரன் ஸ்காட்(lauren scott), உயிரிழந்து கிடப்பதாகபொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பியதோடு, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதன் படி, பொலிசார் கூருகையில், கடந்த வருடம் மே 25 ஆம் தேதி அன்று ஒரு அதிகாரி ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பினத்தவரை முட்டியால் அழுத்தி கொலை செய்தது, உலகளவில் அதிர்வலைகளை உண்டாக்கியது. இந்நிலையில், கடந்த மே 4ஆம் தேதியன்று ஜார்ஜ் பிளாய்டின் (George Floyd)உருவம் வரையப்பட்டிருந்த சுவரின் முன்பு, இந்த நடிகை, மேலாடை அணியாமல் நடந்து சென்றிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் அதனை புகைப்படமாக எடுத்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட நிலையில் ஜார்ஜ் பிளாய்டை (George Floyd)அவமரியாதை செய்ததாக இணையதளவாசிகள் கடுமையாக விமர்சித்தனர்.
எனவே ஜார்ஜ் பிளாய்டனின் (George Floyd)ஆதரவாளர்கள் அவரை கொலை செய்திருக்கலாம் எனும் கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த நடிகையின் உறவினர் ஒருவர் கூறுகையில், லாரனின் தாத்தாவும் பாட்டியும் கடந்த வருடம் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தனர்.
இதன் காரணமாக அவர் மன அழுத்தத்தில் இருந்தாகவும் கூறிய அவர், ஆவிகளின் சத்தம் அவருக்கு கேட்டுள்ளதாகவும் லாரன் ஸ்காட்(lauren scott) அவைகளுடன் பேசியதாக தெரிவித்துள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.