புருண்டியில் மர்ம நோய்: 5 பேர் உயிரிழப்பு
புருண்டியில் மர்ம நோய் ஒன்று பரவி வருவதாகவும், இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நோய்க்கு என்ன காரணம்? இது எப்படி பரவுகிறது? போன்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை.
இந்த நோய் என்னவென்று கண்டறிய மருத்துவர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாத இறுதியில் புருண்டியின் வடக்கு பகுதியான எம்பாண்டா மாவட்டத்தில் இந்த மர்ம நோயின் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டது.
இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு காய்ச்சல், வாந்தி, இரத்தத்துடன் கூடிய சிறுநீர், மஞ்சள் காமாலை, இரத்த சோகை போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன.
சிலருக்கு வயிற்றுப்போக்கு, சோர்வு, வயிற்று வலி போன்ற அறிகுறிகளும் காணப்படுகின்றன. இதுவரை இந்த நோய்க்கு என்ன காரணம்? இது எப்படி பரவுகிறது? போன்ற விவரங்கள் தெரியவில்லை.
எபேலா, மார்பர்க் வைரஸ் மற்றும் ரிப்ட் வெலி காய்ச்சல் போன்ற நோய்கள் இந்த மர்ம நோய்க்கு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.
ஆனால், இந்த நோய்கள் தான் இந்த மர்ம நோய்க்கு காரணம் என்று இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.