புயல் காரணமாக வாழ வழியின்றி தவிக்கும் மக்கள்
அண்மையில் அட்லாண்டிக் கனடா பகுதியை தாக்கிய புயல் காற்று காரணமாக அந்தப் பகுதி மக்கள் வாழ வழியின்றி தவித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பியோனா புயல் காற்று சீற்றத்தினால் நோவா ஸ்கோட்டியா, பிரின்ஸ் எட்வர்ட் தீவுகள் உள்ளிட்ட சில பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டன.
புயல் காரணமாக வீடுகளை இழந்த மக்கள் தங்குவதற்கு இடமின்றி தொடர்ந்தும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
சிலர் வீடுகள் இல்லாத காரணத்தினால் ஹோட்டல்களில் தங்கியிருக்க நேரிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புயல் காற்றினால் சேதமடைந்த வீடுகளை திருத்துவதற்கு ஓராண்டு காலம் வரையில் தேவைப்படும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
புயல் காற்று ஏற்பட்ட போது ஆரம்ப கட்ட உதவிகள் கிடைக்கப் பெற்ற போதிலும் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு போதியளவு உதவிகள் கிடைக்கவில்லை என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.