நயகரா நீர்வீழ்ச்சியிலிருந்து பெண்ணின் சடலத்தை மீட்ட அமெரிக்க பாதுகாப்பு படையினர்!
நயகரா நீர்வீழ்ச்சியில் (Niagara Falls) மூழ்கியிருந்த காரிலிருந்து சடலமொன்று ஹெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த நீர்விழ்ச்சி கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்துக்கும் ஐக்கிய அமெரிக்காவின் நியு யார்க் மாநிலத்துக்கும் இடையேயான எல்லையாக கருதப்படுகின்றது.
குறித்த நீர்வீழ்ச்சியில் கார் ஒன்று மிதந்து கொண்டிருந்த போது ஹெலிகொப்டரிலிருந்து கயிற்றின் உதவியுடன் அந்த இடத்திற்கு சென்ற பாதுகாப்பு படையினர் சடலத்தை மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்க கரையோரப் பாதுகாப்புப் பிரிவு படைவீர்ர் ஒருவரே இவ்வாறு சடலத்தை மீட்டுள்ளார்.
கடுமையான நீரோட்டம் இருந்த நிலையில் குறித்த சடலத்தை போராடி மீட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சடலமாக மீட்கப்பட்டவர் ஒர் பெண் எனவும், 61 வயதானவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.