மாணவிகள் தங்கியிருந்த விடுதிக்குள் நிர்வாணமாக புகுந்த நபர்
கனடாவில் மாணவிகள் தங்கியிருக்கும் விடுதியொன்றுக்குள் நபர் ஒருவர் ஆயுதங்களுடன் நிர்வானமாக புகுந்துள்ளார்.
மொன்றியாலின் சய்னா டவுன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டுக்கு சென்ற போது நபர் ஒருவர் கத்தியொன்றுடன் நிர்வாணமாக நிற்பதனைப் பார்த்து அதிர்ச்சியுற்றதாக மாணவி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் எவ்வாறான தாக்குதலை தம்மீது மேற்கொள்வார் என தெரியாது அச்சமுற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நபர் இரண்டு வாரங்களுக்கு போதுமான உணவை வழங்குமாறு மாணவியிடம் கோரியதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சக மாணவியொருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
விரைந்து செயற்பட்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
49 வயதான வீடற்ற நபர் ஒருவரே இவ்வாறு குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
வீடற்றவர்கள் உளப் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும் இதனால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.