ஜப்பானில் இன்று கால் பதித்த நான்சி பெலோசி!
அமெரிக்க மக்களவை நாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi) தற்போது ஜப்பானில் இருக்கிறார். தம்முடைய ஆசியப் பயணத்தின் கடைசிக்கட்டமாக அவர் ஜப்பான் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
திருமதி பெலோசி 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பானுக்கு இப்போதுதான் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை, அவர் ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவைச் (Fumio Kishida) சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானியக் கீழவை நாயகர் ஹிரோயுக்கி ஹொசோடாவுடனும் (Hiroyuki Hosoda) திருமதி பெலோசி ஆலோசனை நடத்தக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க மக்களவை நாயகர் நான்சி பெலோசி நேற்று முன்தினம் தைவானுக்குப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து தைவானைச் சுற்றிலும் சீனா மிகப் பெரிய அளவில் ராணுவப் பயிற்சிகளை நடத்தி வருகிறது.
ஜப்பானின் சிறப்புப் பொருளியல் மண்டலத்துக்குள் சீனா ஐந்து புவியீர்ப்பு ஏவுகணைகளைப் பாய்ச்சியதாகத் தோக்கியோ குற்றஞ்சாட்டியுள்ளது.