தென்கொரியாவுக்குச் சென்ற நான்சி பெலோசி!
அமெரிக்க மக்களவை சபாநாயகர் நான்சி பெலோசி(Nancy Pelosi) சர்ச்சைக்குரிய தைவானியப் பயணத்தை முடித்துக்கொண்டு தென்கொரியாவுக்குச் சென்றுள்ளார்.
அவர் தென்கொரிய நாடாளுமன்ற சபாநாயகர் கிம் ஜின் பியோவைச் (Kim Jin-pyo) சந்தித்தாக தெரியவந்துள்ளது.
வடகொரியா, இந்தோ-பசிபிக் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் போன்ற உலகச் சவால்கள் பேச்சுக்கள் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.
இந்த சந்திப்புக்குப் பிறகு கூட்டறிக்கை வெளியிடப்படும். அவர் தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோலைச் சந்திக்க மாட்டார். தென்கொரிய அதிபர் தற்போது வெளிநாட்டில் விடுமுறையில் இருக்கிறார்.
தென்கொரிய வெளியுறவு அமைச்சர் பார்க் ஜின்னும் (Park Jin) நாட்டில் இல்லை.
அவர் கம்போடியாவில் நடைபெறும் ஆசியான் வெளியுறவு அமைச்சர் மாநாட்டில் இருப்பதாக தெரியவந்துள்ளது.