சர்வதேச விண்வெளி மையத்தில் அமெரிக்கா - ரஷ்யா இடையேயுள்ள ஒத்துழைப்பு குறித்து வெளியிட்ட நாசா
சர்வதேச விண்வெளி மையத்தில் அமெரிக்கா - ரஷ்யா இடையேயான ஒத்துழைப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று நாசா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை இயக்கி வருகின்றன.
தற்போது, அங்கு அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஆராய்சி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள் சர்வதேச விண்வெளி மையத்தில் ரஷ்யாவின் ஒத்துழைப்பை சீர்க்குலைக்கும் எனவும், இதனால் 500 டன்னுக்கு மேல் எடை கொண்ட சர்வதேச விண்வெளி மையம் பூமியில் விழும் எனவும் ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மாஸ் தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
இதன்படி அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் திட்ட மேலாளர் ஜோயல் மொண்டல்பானோ (Joel Montalbano) பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் “சர்வதேச விண்வெளி மையத்தில் அமெரிக்க - ரஷ்யா ஒத்துழைப்பின் அடிப்படையில் எதுவும் மாறவில்லை. நாங்கள் இன்று இருப்பதைப் போலவே தொடர திட்டமிட்டுள்ளோம்.
சர்வதேச விண்வெளி மையம் இயங்குவதற்கு இருவரும் ஒருவருக்கொருவர் தேவை” என கூறினார்.