இஸ்ரேல் - பாலஸ்தீன் யுத்தத்தில் உள்நுழையும் நேட்டோ அமைப்பு!
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடுமையானத் தாக்குதலை மேற்கொண்டு வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்க இங்கிலாந்து தனது 'R08 குயின் எலிசபெத்' எனும் போர் கப்பலை காசாவை நோக்கி அனுப்ப ஆலோசித்து வருகிறது.
இதற்கு முன்னர் அமெரிக்காவின் போர் கப்பல் தற்போது காசாவுக்கு அருகே நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இங்கிலாந்தும் தனது போர் கப்பலை அனுப்பவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பலம் வாய்ந்த அமைப்பு
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த (07.10.2023) கடுமையான தாக்குதலை ஆரம்பித்திருந்தது.
மத்திய கிழக்கின் பலம் பொருந்திய நாடான இஸ்ரேல் மீது காசா எனும் சிறிய பகுதியிலிருந்து தாக்குதல் நடாத்திவருகின்றமைக் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்நிலையில், இந்த விடயம் உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இதனையடுத்து இஸ்ரேல் 5வது நாளாக காசா மீது தொடர் தாக்குதலை நடாத்தி வருகிறது.