ஜப்பானில் அலுவலம் திறக்கும் நேட்டோ! சீனா கடும் சினம்
நேட்டோ தனது பிராந்திய அலுவலகமொன்றை ஜப்பானில் திறக்கவுள்ளது.
இந்தோபசுபிக்கில் உள்ள தனது சகாக்களான அவுஸ்திரேலியா தென்கொரியா நியுசிலாந்து போன்ற நாடுகளுடன் நெருக்கமாக இணைந்து செயற்படுவதற்காக ஜப்பானில் அலுவலகம் திறக்கப்படவுள்ளது.
சீனா கடும் எதிர்ப்பை வெளியிடும்
அதேவேளை நேட்டோவின் இந்த முயற்சிக்கு சீனா தனது கடும் எதிர்ப்பை வெளியிடும் என எதிர்வு கூறல்கள் வெளியாகியுள்ளன.
நேட்டோ ஆசியபசுபிக்வரை தன்னை விஸ்தரிப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளிற்கு சீனா ஏற்கனவே கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் நேட்டோ ஜப்பானின் டோக்கியோவில் தனது அலுவலகத்தை அடுத்தவருடம் திறக்கவுள்ளது. ஆசியாவில் இவ்வாறான அலுவலகம் திறக்கப்படவுள்ளமை இதுவே முதல்தடவை ஆகும்.
இந்தஅலுவலகம் நேட்டோ தனது முக்கிய சகா ஜப்பானுடனும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுடனும் ஆலோசனைகளில் ஈடுபடுவதற்கு உதவும். ஜப்பானில் நேட்டோவின் அலுவலகம் திறக்கப்படவுள்ளதை ஜப்பானும் நேட்டோவும் உறுதி செய்துள்ளன.
இந்தோ பசுபிக்கில் இடம்பெறும் விடயங்கள் குறித்து நேட்டோவின் ஆர்வம் அதிகரித்துள்ளதன் தொடர்ச்சியாகவே இந்த அலுவலகத்தை நேட்டோ ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.