உக்ரைனுக்கு நேட்டோ உதவாது - ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனுக்கு படைகளை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என நேட்டோ தெரிவித்துள்ளது.
நேட்டோ என்பது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் இராணுவக் கூட்டணியாகும். அமெரிக்கா தலைமையிலான இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் எந்த நாடு மீதும் ஆயுதம் ஏந்திய தாக்குதல் நடத்தப்பட்டால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்பது ஒப்பந்தம்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர், நேட்டோவில் சேர ஊக்குவித்ததை அடுத்து, உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மோதல் ஏற்பட்டது. அமெரிக்கா உக்ரைனை நேட்டோ படைகளில் சேர்த்துக்கொள்ள முயன்றபோது, அதற்கு விருப்பமில்லாத ரஷ்யா, உக்ரைன் மீது போரை அறிவித்தது.
இந்நிலையில், உக்ரைனுக்கு படைகளை அனுப்பும் திட்டம் எதுவும் நேட்டோவிடம் இல்லை என அதன் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, போர் நிலவரம் குறித்து விவாதிக்க நேட்டோ நாடுகள் நாளை அவசர ஆலோசனை நடத்தவுள்ளன.