நவால்னி மரணம்; அவுஸ்திரேலிய பிரதமர் சீற்றம்!
ரஸ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி மரணத்திற்கு ஜனாதிபதி விளாடிமிர் புட்டினே காரணம் என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
அவரது மரண செய்தியை அறிந்து அவுஸ்திரேலியா அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளது என அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார். ரஸ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி சிறைசாலையில் நேற்றையதினம் உயிரிழந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
நவால்னி மரணத்திற்கு ரஷ்ய அதிபர் புடினே காரணம்
இந்நிலையில் அவரது மரணத்திற்கு ரஷ்ய அதிபர் புடினே காரண என பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்நிலையில் அலெக்சி நவால்னி மரணம் தொடர்பில் அவுஸ்திரேலிய பிரதமர் கூறுகையில்,
சிறையில் இடம்பெற்ற இந்த மரணத்திற்கு விளாடிமிர் புட்டினும் அவரது அரசாங்கமுமே காரணம் என நாங்கள் குற்றம்சாட்டுகின்றோம் விளாடிமிர் புட்டின் அரசாங்கம் ஒருஏதேச்சதிகார அரசாங்கம் நாங்கள் ஜனநாயகம் ஏதேச்திகாரம் என்ற இரண்டு உலகின் மத்தியில் பிளவுபட்டுள்ளோம் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் விளாடிமிர் புட்டின் போன்ற ஏதேச்சதிகாரிகளின் நடவடிக்கைகளை அரசாங்கம் கடுமையாக கண்டிக்கவேண்டும் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.