ஆஸி தாக்குதல்தாரி மீது 59 குற்றச்சாட்டுகள் பதிவு
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட இருவரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், உயிர் பிழைத்த துப்பாகிதாரி நவீத் அக்ரம் மீது 15 கொலைக் குற்றச்சாட்டுகள் உட்பட 59 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் தெரிவித்துள்ளது.
மற்றொரு துப்பாக்கிதாரியான அவரது 50 வயதுடைய தந்தை சஜித் அக்ரம், சம்பவ இடத்தில் பொலிஸார் நடந்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.

சிட்னி நகரின் மிகவும் பிரபலமான போண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (14) மாலை யூதர்களின் ஹனுக்கா நிகழ்வில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் சிறுமி ஒருவர் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 40 பேர் காயமடைந்தனர்.
அதேவேளை 1996 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற மிக மோசமான துப்பாக்கிச் சூடு இது என குறிப்பிடப்படுகிறது.
அதேவேளை உயிரிழந்த தாக்குதாரி இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.