வீட்டில் நாளாந்தம் ஒரு நாட்டின் கொடியை பறக்க விடும் கனேடிய தம்பதியினர்
கனடாவில் ஹாலிபிக்ஸில் ஒர் தம்பதியினர் தமது வீட்டில் நாள் தோறும் வித்தியாசமான ஓர் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு நாளும் ஒரு நாட்டினது தேசிய கொடியை இந்த தம்பதியினர் தமது வீட்டில் பறக்க விடுவதனை வழக்கமாக கொண்டுள்ளனர்.

வரலாற்று ஆய்வாளரான டேன் கொன்லின் மற்றும் அவரது மனைவி பெற்றிசியா எச்ஸிசன் ஆகியோரே இவ்வாறு வித்தியாசமான ஓர் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
நாடுகளின் தேசிய கொடிகள் பற்றிய வரலாற்று ஆய்வுகளில் தமக்கு மிகுந்த நாட்டம் உண்டு என டேன் கொன்லின் தெரிவிக்கின்றார்.
ஒவ்வொரு நாளும் கணவனும் மனைவியும் கலந்தாலோசனை செய்து வீட்டுக்கு வெளியே ஓர் நாட்டின் தேசிய கொடியை பறக்கவிடுவதுடன் அது குறித்த ஒன்றை பதிவிடுகின்றனர்.
இதனை ஓர் பொழுது போக்காக செய்வதாகவும் இதன் ஊடாக அயலவர்களுடன் பேச சந்தர்ப்பம் கிடைப்பதாகவும் டேனின் மனைவி தெரிவிக்கின்றார்.
வரலாற்றில் இடம்பெற்ற சம்பவங்கள் நிகழ்வுகளை கருத்திற் கொண்டு இந்த நாளில் இந்த கொடியை பறக்க விடுவது என அவர்கள் தீர்மானிக்கின்றார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தம்பதியினரின் வீட்டை பார்வையிடுவதற்கு பலரும் வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தம்பதியினர் வரலாறு பற்றிய விபரங்களை மிக எளிமையான முறையில் மக்களுக்கு தெளிவுபடத்தி வருகின்றனர்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        