நேபாள வெள்ளப்பெருக்கு ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,290 ஆக உயர்வு
திபெத்- நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,290 ஆக உயர்ந்துள்ளது.
திபெத்- நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி அன்று பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த வெள்ளத்தில் பல பேர் சிக்கி உயிரிழந்ததுடன் மீட்பு பணியின்போது தொடர்ந்து சடலங்கள் மீட்கப்படுகின்றன.
உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 1,290 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இந்த இயற்கைச் சீற்றத்தில் சிக்கி, இந்தியர்கள் 275 பேர் உட்பட 4,700-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
அவர்களைத் தேடும் பணியில் நேபாள ராணுவத்தினர் மற்றும் சர்வதேச பேரிடர் மீட்புக் குழுவினர் உட்பட 21,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மலைக்கிராமங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் வேட்டை தடையின்றி நடந்து வருகிறது.