15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம் ; ஒருவர் மட்டும் சரணடைந்த வினோதம்
நேபாளத்தில் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக சமூக வலைத்தளம் மூலம் குரூப் உருவாக்கி இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி வந்தனர்.
அதனைத்தொடர்ந்து அரசு சமூக வலைத்தளங்களுக்கு தடைவிதித்தது. இதனால் இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடினர். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. அரசு கட்டிடங்களை தீவைத்து கொழுத்தினர்.
தண்டனைக் காலம்
இதனைப் பயன்படுத்தி நாட்டில் உள்ள 25-க்கும் மேற்பட்ட சிறைச்சாலைகள் உடைக்கப்பட்டு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடினர்.
இதில் நேபாளத்தின் தொலைதூர வடக்கு மாகாணமான கைலாலியின் தலைநகர் தங்காடியில் உள்ள சிறையும் உடைக்கப்பட்டு கைதிகள் தப்பி ஓடினர்.
இந்த சிறையில் இருந்து சுமார் 692 சிறைக்கைதிகள் தப்பி ஓடினர். தப்பித்துச் சென்ற ஒருசில நாட்களில் ஒரேயொரு கைதி மீண்டும் சிறைக்கு திரும்பியுள்ளார்.
அடுத்த அரசு அமைக்கப்பட்ட பிறகு, தண்டனைக் காலம் இரண்டு மடங்காக அறிவிக்கப்படலாம் என்ற அச்சத்தில் திரும்பி வந்ததாக தெரிவித்துள்ளார். தன்னுடைய தவறு எனக்கூறி சிறையில் சரணடைந்துள்ளார். ஆனால் அதிகாரிகள் அவரது அடையாளத்தை வெளியிடவில்லை.
தப்பி ஓடியிருக்கலாம். ஆனால் போலீஸ் மீண்டும் அவரை கைது, சிறையை உடைத்து தப்பிச் சென்றதாக புதிய குற்றசாட்டுக்கு ஆளானால், தண்டனை மேலும் அதிகமாகவும் என்பதை உணர்ந்து சரணடைந்துள்ளார்.