ஐ.நா சபையில் நடந்த அவமானம் ; யாருமற்ற அரங்கில் தனியாக உரையாற்றிய நெதன்யாகு
ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுக்கூட்டத்தில் நாட்டின் தலைவர்களும் உரையாற்றி வருகின்ற நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்ற அழைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, அரங்கத்தில் அமர்ந்திருந்த பிரதிநிதிகள் எழுந்து வெளியேறியதோடு, பலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
வெறிச்சோடிய ஐ.நா சபை
இந்நிலையில் பிரதிநிதிகள் யாருமற்ற நிலையில் வெறிச்சோடிய ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் நெதன்யாகு உரையாற்றியுள்ளார்.
இதன்போது அவர் உரையாற்றியுள்ளதாவது, “பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது முட்டாள்தனம்.
பிணைக்கைதிகளை மீட்கும் வரையில் இஸ்ரேல் ஓயாது. மேலும் ஹமாஸை அழிக்கும்வரை இப் போர் தொடரும். இங்கு யாரும் ஒக்டோபர் 7ஆம் திகதியை ஞாபகத்தில் வைத்துக்கொள்வதில்லை.
ஆனால், எங்களுக்கு அது ஞாபகத்தில் இருக்கிறது. இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதை விட்டுவிட்டு, தீமையை ஏற்கின்றனர். பொதுவெளியில் இஸ்ரேலை கண்டிக்கும் பல தலைவர்கள், இரகசியமாக நன்றி கூறுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
Happening now at the UN General Assembly:
— sarah (@sahouraxo) September 26, 2025
Diplomats walked out during Netanyahu’s speech.
He is left speaking to an empty room.
The world is no longer listening to Israel’s propaganda. pic.twitter.com/yV704rh32t