சூடுபிடிக்கும் இஸ்ரேல் அரசியல் களம்; நெதன்யாகு அரசியல் வாழ்க்கை அஸ்தமனம்!
புதிய அரசை அமைப்பதற்கு இஸ்ரேல் எதிர்கட்சி தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள காலக்கெடு எதிர்வரும் டிசம்பர் 6 திகதியுடன் முடிவடைகிற நிலையில் நெதன்யாகு பிரதமராகத் தொடர வாய்ப்பில்லை என சர்வதேச தகவ்லகாள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இஸ்ரேலில் நெதன்யாகு இல்லாத ஆளுங்கட்சியினருடன் கூட்டணி சேர்ந்து புதிய ஆட்சி அமைக்க எதிர்கட்சித் தலைவர் ஐசன்கோட் வியூகம் வகுத்துள்ளார்.இதற்காக அவர் அந்த கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெதன்யாகு பிரதமராகத் தொடரக் கூடாது
இதற்கமைய, தனது மையவாதக் கட்சியான 'யஷார்' தலைமையிலான புதிய அரசில் லிகுட் கட்சி இணைய வேண்டும் என்றும், ஆனால் எக்காரணம் கொண்டும் நெதன்யாகு பிரதமராகத் தொடரக் கூடாது என்றும் ஐசன்கோட் திட்டவட்டமாக நிபந்தனை விதித்துள்ளார்.
ஐசன்கோட்டின் இந்த 'நெதன்யாகு இல்லாத லிகுட் கூட்டணி' முயற்சிக்கு அவரது முக்கியக் கூட்டணித் தலைவரும் முன்னாள் பிரதமருமான நப்தலி பென்னட்டும் முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக 'யஷார்' மற்றும் லிகுட் கட்சியின் பேச்சுவார்த்தைக் குழுவினர் ஹெர்ஸ்லியா நகரில் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், பதவி விலகும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராக இல்லாத வகையில் அவரது 'லிகுட்' கட்சியைக் கூட்டணியில் இணைத்து பரந்த அளவிலான தேசிய ஒருமித்த அரசை அமைக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார்.
இஸ்ரேலில் கடந்த ஒக்டோபரில் நடைபெற்ற 120 இடங்களைக் கொண்ட பாராளுமன்றத் தேர்தலில் ஆட்சியமைக்கத் தேவையான 61 இடங்கள் எந்தவொரு கூட்டணிக்கும் கிடைக்கவில்லை.
நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணி 53 இடங்களையும், ஐசன்கோட்டின் எதிர்க்கட்சி கூட்டணி 48 இடங்களையும் அரபுக் கட்சிகள் 19 இடங்களையும் கைப்பற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது.