அமெரிக்க குடியேற்றக் கொள்கையில் புதிய மாற்றங்கள் ; 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பாதிப்பு
அமெரிக்காவின் பாதுகாப்புத் திரையிடல் மற்றும் விசாரணை நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 70க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குடியேற்ற விசா (Immigrant Visas) வழங்குவதை இடைநிறுத்துவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 21 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை, அமெரிக்காவுக்கு வரும் குடியேற்றவாசிகள் நிதி ரீதியாக தற்சார்பு கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றும், அவர்கள் அந்த நாட்டிற்கு ஒரு பொதுச் சுமையாக மாறக்கூடாது என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவைத் தொடர்ந்தே எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் உள்ள நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் தொடர்ந்து விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் மற்றும் நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொள்ளலாம் என்ற போதிலும், ஆய்வு நடைமுறைகள் முடியும் வரை அவர்களுக்கான விசாக்கள் வழங்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பட்டியலில் இல்லாத நாட்டின் செல்லுபடியாகும் கடவுச்சீட்டைப் பயன்படுத்திப் பயணிக்கும் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்களுக்கும், அமெரிக்கக் குடும்பங்களால் தத்தெடுக்கப்படும் குழந்தைகளுக்கும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்த இடைநிறுத்தம் குடியேற்ற விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், சுற்றுலா விசாக்கள் உள்ளிட்ட தற்காலிக விசாக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும், ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்கள் எவையும் ரத்து செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பட்டியலில் உள்ள நாடுகள்
ஆப்கானிஸ்தான்
அல்பேனியா
அல்ஜீரியா
ஆன்டிகுவா மற்றும் பார்புடா
ஆர்மீனியா
அஸர்பைஜான்
பஹாமாஸ்
பங்களாதேஷ்
பார்படாஸ்
பெலாரஸ்
பெலீஸ்
பூட்டான்
போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா
பிரேசில்
மியன்மார்
கம்போடியா
கெமரூன்
கேப்
வேர்ட்
கொலம்பியா
ஐவரி
கோஸ்ட்
கியூபா
கொங்கோ
ஜனநாயக குடியரசு
டொமினிகா
எகிப்து
எரித்திரியா
எத்தியோப்பியா
பிஜி
காம்பியா
ஜோர்ஜியா
கானா
கிரெனடா
குவாத்தமாலா
கினியா
ஹெய்ட்டி
ஈரான்
ஈராக்
ஜமைக்கா
ஜோர்டான்
கசக்ஸ்தான்
கொசோவோ
குவைட்
கிர்கிஸ்தான்
லாவோஸ்
லெபனான்
லைபீரியா
லிபியா
மோல்டோவா
மொங்கோலியா
மொண்டெனீக்ரோ
மொராக்கோ
நேபாளம்
நிகரகுவா
நைஜீரியா
வடக்கு மெசிடோனியா
பாகிஸ்தான்
ரஷ்யா
ருவாண்டா
செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்
செயிண்ட் லூசியா
செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்
செனகல்
சியரா
லியோன்
சோமாலியா
தெற்கு சூடான்
சூடான்
சிரியா
தன்சானியா
தாய்லாந்து
டோகோ
டியூனிசியா
உகாண்டா
உருகுவே
உஸ்பெகிஸ்தான்
யேமன்
கொங்கோ குடியரசு