அவுஸ்ரேலிய மாணவர் விசா தொடர்பில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்
சர்வதேச மாணவர் வீசாக்களுக்கான நிதித் தேவையை அவுஸ்திரேலியா கணிசமாக அதிகரித்துள்ளது. சாதனை அளவான குடியேற்றம் மற்றும் மாணவர்கள் மீதான சுரண்டல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய விதி
இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் அமுலுக்கு வரும் புதிய விதியின்படி, வீசாவுக்கான தகுதிக்கு சர்வதேச மாணவர்கள் குறைந்தது 29,710 அவுஸ்திரேலிய டொலர் (19,576 அமெரிக்க டொலர்) சேமிப்பை காண்பிப்பது கட்டாயமாக்கப்படும்.
இது கடந்த ஏழு மாதங்களில் இடம்பெறும் இரண்டாவது அதிகரிப்பாகும். முன்னதாக கடந்த ஒக்டோபரில் 21,041 அவுஸ்திரேலிய டொலரில் இருந்து 24,505 அவுஸ்திரேலிய டொலர்களாக அதிகரிக்கப்பட்டது.
மாணவர் வீசா கட்டுப்பாட்டை தொடர்ந்து அதிகரித்து வரும் அவுஸ்திரேலியா கடந்த மார்ச்சில் அந்த வீசாவுக்கான ஆங்கில மொழித் தேவைகளை அதிகரித்தது.