உலகில் இதுவரை ஐந்து பேர் மட்டுமே பார்வையிட்ட புதிய நிறம்

Sulokshi
Report this article
உலகில் இதுவரை ஐந்து பேர் மட்டுமே பார்வையிட்ட புதிய நிறம் ஒன்றை கண்டுப்பிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். புதிய நிறம் பற்றிய ஆய்வு சயின்ஸ் அட்வான்சஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த நிறம் 'ஓலோ' என்று அழைக்கப்படுகிறது. நீலம் மற்றும் பச்சை நிறத்தின் நிறைவுற்ற சாயல் எனக் கூறப்படும் குறித்த நிறத்தை வெற்றுக் கண்ணால் பார்வையிட முடியாது.
'ஓலோ' - லேசரால் மட்டுமே பார்வையி ட முடியும்
லேசர் தொழில்நுட்பத்தினூடாக மாத்திரமே பார்வையி ட முடியும். இது சாதாரண கண் நிற புலனுணர்வு வரம்பைத் தாண்டி மக்களை பார்வையிட தூண்டும் என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
'விஸார்ட் ஆஃப் ஓஸ்' என்ற திரைப்படத்தில் எமரால்ட் நகரத்தில் உள்ள மக்கள் அணியும் பச்சை நிற கண்ணாடிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், ஆராய்ச்சியாளர்கள் ஓஸ் விஷன் சிஸ்டம் நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
இதன்போது, ஆய்வு ஒன்றில் புதிய நிறம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தூண்டப்பட்ட லேசரின் இயற்கையான நிறத்தை உணரும் ஒரு சில மைக்ரான்களால் (ஒரு மீட்டரில் ஒரு மில்லியனில் ஒரு பங்கு) ஓஸ் லேசர் சமிக்ஞைகள் வேண்டுமென்றே "சிறிது கட்டுப்பாடற்ற இயக்கத்தின் போது" 'ஓலோ' நிறம் கண்டறியப்பட்டுள்ளது.