பிலிப்பைன்சில் உருவாகியுள்ள புதிய புயல் ; 10 ஆயிரம் பேர் வெளியேற்றம்
பிலிப்பைன்சின் ககாயன் மாகாணம் அருகே புதிய புயல் உருவாகி உள்ள நிலையில் சுமார் 10 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
ரகசா என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் அங்குள்ள லூசோன் நகரில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
அப்போது மணிக்கு சுமார் 230 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே கடலோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி சுமார் 10 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். இதற்காக பல இடங்களில் தற்காலிக நிவாரண முகாம்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இதனை தொடர்ந்து புயல் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டு உள்ளது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 500-க்கும் மேற்பட்ட விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளன.