மற்றொரு முக்கிய வெளிநாடொன்றில் பரவும் புதிய வீரியமுடைய கொரோனா தொற்று!7
ரஷ்யாவிலும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு கண்டறியப்பட்டதை அடுத்து இன்று முதல் பிரித்தானியாவிற்கான விமான போக்குவரத்து தடையை நீடித்துள்ளது.
பிரத்தானியாவிற்கான விமான போக்குவரத்தை ரஷ்யா இடைநிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.
பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்காக பெப்ரவரி 1 ஆம் திகதி இரவு 11:59 மணி வரை இந்த இடைநிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ளது என கொரோனா வைரஸ் தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி முதல் ரஷ்யா பிரித்தானியாவிற்கான விமான போக்குவரத்தை இடைநிறுத்தியது. பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 61,908 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3,412,390 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.