கனடாவில் முன்கூட்டிய வாக்களிப்பில் சாதனை
கனடாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் முன்கூட்டிய வாக்களிப்பில் சாதனை படைக்கப்பட்டள்ளது.
தேர்தலின் முதல் நாளில் நடந்த முன்னோடி வாக்குப்பதிவில் வரலாறு காணாத மக்கள் திரளாக வந்து வாகக்ளித்தமை குறிப்பிடத்தக்கது.
முதல் நாளான வெள்ளிக்கிழமை மட்டும் இரண்டு மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்று தேர்தல் கனடா தெரிவித்துள்ளது.
இது 2021-ம் ஆண்டில் நடந்த தேர்தலை விடவும் வாக்குப்பதிவு ஆர்வம் அதிகமாக இருப்பதைக் காட்டுகிறது. முன்கூட்டிய வாக்குப்பதிவு ஏப்ரல் நீண்ட விடுமுறை நாட்களில் நடைபெறுகிறது,
ஏப்ரல் 28 ஆம் திகதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்கான ஒரே வாரத்திற்கு முன்பாக இந்த வாய்ப்பு முடிவடைகிறது. பொதுத் தேர்தலை முன்னிட்டு, லிபரல் கட்சியும், நியூடெமோக்ராட் கட்சியும் (NDP) தங்களின் தொகுப்புசெய்யப்பட்ட வாக்குறுதி திட்டங்களை சனிக்கிழமை வெளியிட்டன.
லிபரல் தலைவர் மார்க் கார்னி — ஒன்டாரியோவில், தனது முழு தேர்தல் திட்டங்களை வெளியிட்டார். இந்த திட்டத்தில் எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் $129 பில்லியன் புதிய செலவுகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு, வீடுகள் மற்றும் வர்த்தக உட்கட்டமைப்பில் முதலீடு செய்வதே இந்த திட்டத்தின் மைய நோக்கமாகும்.
NDP தலைவர் ஜக்மீத் சிங் — ப்ரிட்டிஷ் கொலம்பியாவின் பார்னபியில் தனது திட்டத்தை வெளியிட்டார். பில்லியனர்கள் மீது புதிய செல்வவரி விதிப்பதன் மூலம் வரிவிதிப்பில் இருந்து ஆண்டு தோறும் $22 பில்லியனை அரசுக்கு வசூலிக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஒரு செல்வந்தன் பங்கு விற்பனை செய்து சம்பாதிப்பதை விட, ஒரு தாதி, ஆசிரியர், தொழிலாளி அதிக வரி செலுத்த வேண்டிய நிலை இருக்கக் கூடாது,” என்று சிங் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலுக்கு முன்னர், வாக்களிக்க விரும்புபவர்கள் ஏப்ரல் 22 வரை, தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வாக்களிக்கலாம்.