பிரான்சில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த புதிய நிபந்தனை
பிரான்ஸ் நாட்டில் 5 முதல் 11 வயதிலான சிற்றார்களுக்கு தடுப்பூசி செலுத்த ஆட்டு அரசு புதிய நிபந்தனைகளை அறிவித்துள்ளது. அதன்படி குறித்த வயதிலான சிறார்களுக்கு அவர்களது பெற்றோரின் ஒப்புதல் மிகவும் முக்கியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பெற்றோரில் ஒருவரது சம்மதம் இருந்தாலே போதும் என்ற நிலை இருந்தது, இந்த நிலையில் தற்போது இந்த புதிய நிபந்தனை நடைமுறைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, 12 -15 வயதுக்குபட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போட பெற்றோர்களில் ஒருவர் மட்டும் சம்மதம் தெரிவித்தால் போதும். 5-11 வயதுடைய சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி பிரான்சில் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை 67,000 சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தற்போது பிரான்ஸ் நாட்டில் சுமார் 400 தடுப்பூசி நிலையங்கள் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.