ஐரோப்பா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!
ஐரோப்பிய நாடுகளுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள சுற்றுலாத் தளங்களில் ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொள்வதால் அங்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் ஸ்பெயின், போர்த்துக்கள், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பொது இடங்களில் மது அருந்தினாலோ, அரை குறை ஆடை அணிந்தவாறு சுற்றுலாத் தளங்களில் வலம் வந்தாலோ, புகைபிடித்தாலோ, அல்லது கடற்கரையில் முகம் சூழிக்க வைக்கும் விதத்தில் நடந்து கொண்டாலோ அபராதங்கள் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அபராதங்கள்
மல்லோர்கா மற்றும் இபிசா தீவுகளில் பொது இடங்களில் மதுக்குடி செய்தால் அதிகபட்சமாக €3,000 (சுமார் ரூ. 3.5 லட்சம்) அபராதம் விதிக்கப்படும் எனவும் போர்ச்சுகலின் அல்புஃபைராவில் கடற்கரை வெளியே குறைவான உடையுடன் நகர்வதற்கு €1,500 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இத்தாலியின் வெனிஸில் கேனால்களில் நீந்தினால் €350 (ரூ. 1.21 இலட்சம் ) விதிக்கப்படும் எனவும், புகைப்படம் எடுக்கக் கூடாத இடங்களில் புகைப் படம் பிடித்தால் €4,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாது பார்சிலோனா, மலாகா, பாரிஸ் போன்ற நகரங்களில் சுற்றுச்சூழலைக் காக்கவும், பொதுமக்கள் அமைதியைப் பேணவும், பொது இடங்களில் புகைபிடித்தல் மற்றும் மாசுபடுத்துதல் போன்ற செயல்களுக்கு €750–€2,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உள்ளூர்வாசிகள் அமைதியாக வாழவும், சுற்றுலா துறையை நிலையான முறையில் பராமரிக்கவும் இந்த விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.