ஜேர்மனி - பிரித்தானியா இடையேயான பயணங்கள் தொடர்பில் புதிய விதி!
பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை ஜேர்மனியில் அல்லது ஏதாவது ஒரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் பயன்படுத்துவதில் முக்கிய மாற்றம் ஒன்று கொண்டுவரப்பட உள்ளது.
பிரெக்சிட் மாற்றக்காலத்தைத் தொடர்ந்து ஜேர்மனிக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் பயணங்கள் தொடர்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், , செப்டம்பர் 28 முதல் பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை ஜேர்மனியில் பயன்படுத்தவேண்டுமானால், ‘UK' ஸ்டிக்கர் ஒன்றை வாகனங்களில் ஒட்டியிருக்கவேண்டும் என்ற புதிய விதி ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதேவேளை இதற்கு முன்னர் ‘GB’ என்ற ஸ்டிக்கர் பயன்படுத்தப்பட்ட நிலையில், அதை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக இனி ‘UK' என்ற ஸ்டிக்கரை பயன்படுத்தவேண்டும் என பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.