அமெரிக்கா–ஈரான் பதற்றத்தில் புதிய திருப்பம் ; ஈரானின் அதிரடி முன்மொழிவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பால் இதுவரை நிராகரிக்கப்பட்ட ஈரானின் புதிய முன்மொழிவு குறித்த தகவல்களை, சிரேஷ்ட ஈரானிய அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தைத் திறந்து, ஈரான் மீதான அமெரிக்க முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருவது இதன் முக்கிய நோக்கமாகும்.

அத்துடன், சிக்கலான அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தற்போதைக்கு ஒத்திவைத்து, அதனை இறுதிக் கட்டத்திற்கு நகர்த்துவது என முன்மொழியப்பட்டுள்ளது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் மீண்டும் தாக்குதல் நடத்த மாட்டோம் என்ற உத்தரவாதத்தை வழங்கினால், போர் முடிவுக்கு வரும் எனத் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் நீரிணையைத் திறந்தால், அமெரிக்கா தனது முற்றுகையை விலக்கிக்கொள்ளும் எனவும் இந்த முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு உடன்படிக்கையை எளிதாக்கும் நோக்கில் இந்த குறிப்பிடத்தக்க மாற்றத்தை முன்மொழிந்துள்ளதாக ஈரான் நம்புவதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.