வேகமாக பரவும் அடையாளம் தெரியாத வைரஸ்: எந்தெந்த நாட்டில் பரவியுள்ளது தெரியுமா?
பிரான்ஸில் கடந்த சில வாரங்களாக அடையாளம் தெரியாத வைரஸ் நோய் ஒன்று பரவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரான்ஸின் லியோன் மாவட்டத்தில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ‘இதுவரை குறித்த நோய் அடையாளம் காணப்படவில்லை.
மேலும் இந்த நோய்த்தொற்று பிரான்ஸில் வேகமாக பரவுவதாகவும் அறிய முடியவில்லை. தற்போது ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகிறது.
அடுத்து வரும் சில நாட்களில் இது தொடர்பான முழுமையான தகவல்கள் தெரியவரும் என பிரான்ஸ் பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இந்த அடையாளம் காணப்படாத நோய், பிரான்ஸ் உட்பட 11 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்துள்ளது.
இந்த நோயினால் இதுவரை 169 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா, பிரித்தானியா, ஸ்பெயின், இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுடன் பிரான்ஸும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.