பிரிட்டிஷ் கொலம்பியாவின் இன்னொரு பகுதியில் கட்டுக்குள் நிக்காத காட்டுத்தீ
பிரிட்டிஷ் கொலம்பியாவின் Vernon அருகே பற்றியெரியும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
Vernon அருகே Becker Lake பகுதியில் மூண்டுள்ள காட்டுத்தீயானது ஒரே ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பில் மட்டுமே காணப்படுகிறது. ஆனால் தற்போதைய சூழலில் அது கட்டுக்குள் இல்லை என்றே தீயணைப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீயானது நகரத்திற்கு வெளியே மூன்று முதல் ஐந்து கிலோமீற்றர் தொலைவில் உள்ளது, அதற்கான காரணம் தற்போது தெரியவில்லை என அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்கள் வெளியேற தயாரான நிலையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருவதாகவும், பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Becker Lake பகுதிக்கு அருகாமையில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். காட்டுத்தீக்கு Lytton கிராமம் மொத்தமாக சேதமடைந்துள்ள நிலையில், தங்களுக்கும் அதே நிலை ஏற்படுமா என்ற கவலையில் பல குடியிருப்புவாசிகள் உள்ளனர்.