புத்தாண்டை வரவேற்கும் நிலையில் கனடா முழுவதும் கடும் குளிர் தாக்கம்
புத்தாண்டை வரவேற்கும் தருணத்தில், கனடா முழுவதும் கடும் குளிர் அலை தாக்கம் ஏற்படவுள்ளதாக கனடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவு, பனிப் புயல், உறைபனி மற்றும் அபாயகரமான பயண நிலை நிலவுகிறது.
கரையோரம் உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடுமையான குளிர் காலநிலை சவாலாக மாற்றியுள்ளது. மத்திய கனடாவின் பெரும்பாலான பகுதிகள் இன்னும் குளிர்கால வானிலை எச்சரிக்கைகளின் கீழ் உள்ளன.

டொராண்டோவில், புதன்கிழமை (புத்தாண்டு முன்னிரவு) சிறிய பனித்தூறல்கள் மற்றும் பனிப் புயல் அபாயம் காணப்படும். மணிக்கு 40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
வெப்பநிலை -2°C ஆக இருந்தாலும், காலை நேரத்தில் -13°C போலவும், பிற்பகலில் -8°C போலவும் உணரப்படும். கடுமையான குளிர் காரணமாக, நகரில் ஐந்து வெப்ப மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
Simcoe County, Grey-Bruce, Huron-Perth உள்ளிட்ட மத்திய ஒன்டாரியோ பகுதிகளில் 10 முதல் 30 செ.மீ வரை பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒர்கென்வெல், கிரான்ட் வெலி போன்ற ரொரண்டோ வடக்கு பெரும்பாக பகுதிகளில் 15–30 செ.மீ பனி, கிட்டத்தட்ட பூஜ்யம் பார்வைத் திறன் நிலவலாம்.
ஒட்டாவாவில், பகல் நேரத்தில் வெயில் காணப்பட்டாலும், அதிகபட்ச வெப்பநிலை -10°C ஆகவும், காற்றின் தாக்கத்தால் -13°C ஆக உணரப்படக்கூடும்.
வடக்கு மற்றும் கிழக்கு க்யூபெக்கின் பெரும் பகுதிகளில் செயலில் உள்ள வானிலை எச்சரிக்கைகள் அமலில் உள்ளன.