புதிதாகத் தெரிவான ஜெர்மனி பெண் மேயருக்கு கத்திக்குத்து
ஜெர்மனியில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் மேயர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயங்களுடன் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தினுள்ளது.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் உள்ள ரூர் பிராந்தியத்தில் ஹெர்டெக்கே நகரில், ஒரு வாரத்திற்கு முன் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஐரிஸ் ஸ்டால்ஸர்.
தீவிரமாகும் விசாரணை
வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில், உடலின் பல இடங்களில் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்தார்.
பெங்களூரில் குப்பை சேகரிப்புக்கு மையங்கள் அமைக்க திட்டம் சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஐரிஸ் ஸ்டால்ஸர் அடுத்த சில நாட்களில் பதவியேற்கவிருந்த நிலையில், அவரை மர்மநபர்கள் கத்தியால் குத்திச் சென்றுள்ளனர்.
வீட்டிற்கு வந்த சில ஆண்கள், தன் தாயை தாக்கி கத்தியால் குத்தியதாக, அவருடைய 15 வயது வளர்ப்பு மகன் தெரிவித்துள்ளார். ஆனால், அவரை சந்தேகத்தின் பெயரில் விசாரணைக்கு அழைத்துச் சென்று உள்ளனர்.