2023 உலக கிண்ணப் போட்டியில் பங்களாதேஷை வீழ்த்திய நியூசிலாந்து!
2023 ஆம் ஆண்டிற்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இன்றைய தினம் இடம்பெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது.
சென்னையில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி களம் இறங்கிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்க்கு 245 ஓட்டங்களை பெற்றது. பங்களாதேஷ் அணி சார்பில் முஷ்பிகுர் ரஹீம் அதிகூடிய ஓட்டங்களாக 66 ஓட்டங்களை பெற்றார்.
பந்துவீச்சில் நியூசிலாந்து அணியின் லாக்கி பெர்குசன்,, 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியடேரில் மிட்செல் நியூசிலாந்து அணி 42.5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
நியூசிலாந்துஅணி சார்பில் 89 ஓட்டங்களையும் கேன் வில்லியம்சன்78 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதன்படி நியூசிலாந்து அணி இதுவரை ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.