கனடாவில் நைஜீரிய பிரஜைக்கு 76 வருட சிறை தண்டனை

Kamal
Report this article
கனடாவில் நைஜீரிய பிரஜை ஒருவருக்கு 76 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுவன் ஒருவனை, இணைய வழியில் பாலியல் தொந்தரவு செய்ததாகவும் மிரட்டியதாகவும் குற்றம் சுமத்தி குறித்த நபர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரியில் வசித்த ராபின் ஜஞ்சுவா என்ற சிறுவன், தனது இன்ஸ்டாகிராம் கணக்கின் ஊடாக தொடர்பு ஏற்படுத்தி துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவனுடன் தொடர்பு கொண்டு அவரின் அந்தரங்கப் புகைப்படங்களை பெற்றுக்கொண்டு அதனை வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டியதாகவும் இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவத்திற்கான நீண்ட மற்றும் சிக்கலான சர்வதேச விசாரணையின் பின், நைஜீரியாவின் ஒலுகேயே அடேடாயோ ஒலாலேக்கான் என்பவருக்கு 76 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.