கனடாவில் நாடு தழுவிய பிடிவிராந்து உத்தரவில் தேடப்படும் நபர்
கனடாவில் நபர் ஒருவருக்கு நாடு தழுவிய அடிப்படையிலான பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மார்க்கம் பகுதியில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் குறித்த நபர் தேடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 21ம் திகதி மாலை 5:30 மணியளவில் லீ அவென்யூ மற்றும் நோபிள் ஸ்ட்ரீட் பகுதியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது நிலை குறித்து மேலதிக தகவல்கள் வழங்கப்படவில்லை. மார்க்கம் பகுதியைச் சேர்ந்த 35 வயதான சாவ் சென் என்ற நபரே இந்த துப்பாக்கிச் சூட்டு சமப்வத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வருகின்றார்.
கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் குறித்த நபருக்கு எதிராக பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.