ஹாமில்டனில் அதிகாலை துப்பாக்கிச் சூடு
கனடாவில் ஹாமில்டன் நகரில், கன்சஷன் ஸ்ட்ரீட் மற்றும் ஈஸ்ட் 33-வது தெரு பகுதியை ஒட்டிய பகுதியில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பல துப்பாக்கி சூடுகள் நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஞாயிறு காலை 5 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பகுதியை பாதுகாப்பாக முடிந்தவரை சோதனை செய்த போலீசார், சந்தேக நபர்களையோ, பாதிக்கப்பட்டவர்களையோ கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் வாகனத்தில் பயணம் செய்தவர்கள், தங்கள் டாஷ் கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் ஏதேனும் இருப்பின், போலீசாரிடம் பகிர்ந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்" என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, மக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேக நபர்களை பற்றிய தகவல் இருப்பின் உடனடியாக அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.