றொரன்டோ வீதியில் திடீரென தீப்பற்றிக் கொண்ட ட்ரக்; பதறிய மக்கள்
றொரன்டோ அதிவேக நெடுஞ்சாலையில் ட்ரக் ரக வாகனமொன்று திடீரென தீப்பற்றிக்கொண்டது.
றொரன்டோவின் கார்டினர் அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிற்பகல் வேளையில் கடுமையான வாகனப் போக்குவரத்து நெரிசல் நிலை நீடித்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வாகனத்தில் தீ பற்றிக் கொண்ட காரணத்தினால் ஜேம்சன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்தக் ட்ரக் வண்டியில் என்ன பொருள் எற்றிச் சொல்லப்பட்டது என்பது பற்றியோ அல்லது எதனால் விபத்து ஏற்பட்டது என்பது பற்றியோ தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இந்த தீ விபத்துச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ட்ரக் வண்டி தீ பற்றிக் கொண்ட போதில் சாரிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.