கனடாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்: பயணிகளுக்கு உயிர் பாதிப்பு கிடையாது
இல்லை டொரொன்டோவிலிருந்து செயிண்ட் மார்டினுக்கு புறப்பட்ட வெஸ்ட்ஜெட் 2276 விமானம், மாலை பிரின்சஸ் ஜூலியானா சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் அவசர வெளியேறும் சறுக்கிகள் (slides) திறக்கப்பட்டு, பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
உயிரிழப்பு அல்லது காயம் எதுவும் இல்லை எனவும், சம்பவம் தொடர்பான துல்லியமான விவரங்கள் இன்னும் விசாரணையில் உள்ளன எனவும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானம் சம்பவத்துக்குப் பிறகு செயிண்ட் மார்டினில் தரையிறங்கிய டொரொன்டோவாசிகள், தங்கள் வீடு திரும்பும் பயணம் ரத்து செய்யப்பட்டதால் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும் சிலர் சமூக ஊடகங்களில் விபத்தாக பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விமானம் எதனால் மிக அவசரமாக தரையிறக்கப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.