இராணுவ பலத்தால் கிரீன்லாந்தை கைப்பற்ற விருப்பமில்லை ; அமெரிக்கா தரப்பில் வெளியான தகவல்
இராணுவ பலத்தை பயன்படுத்தி கிரீன்லாந்தை கைப்பற்ற விருப்பமில்லை” என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வெனிசுலாவை தொடர்ந்து டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி அதிகாரம் பெற்ற கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க முயற்சி செய்து வருகிறது.

பேச்சுவார்த்தை
இதுகுறித்து வாஷிங்டன்னில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மார்கோ ரூபியோ, “ஆர்க்டிக் பகுதியில் சீனா, ரஷ்யாவின் மிரட்டல்களை சமாளித்து, அமெரிக்காவை பாதுகாத்து கொள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
அவர் அதிபராக பதவி ஏற்றதிலிருந்தே கிரீன்லாந்தை கைப்பற்றுவது பற்றி பேசி வருகிறார். ஆனால், ராணுவ பலத்தை பயன்படுத்தி கிரீன்லாந்தை கையகப்படுத்த அமெரிக்கா விரும்பவில்லை.
இதுகுறித்து அடுத்த வாரம் டென்மார்க், கிரீன்லாந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது ” என விளக்கம் அளித்துள்ளார்.